உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகருக்கு இரு விருதுகள்

உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

எதிர்வரும் 13ம் திகதி இந்தியாவின் கொல்கொட்டா சைனா பார்க் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள குறித்த இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. 1995ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குற்றங்களை தடுத்தல், இன சகோதரத்துவத்தை ஏற்படுத்தல், சமூக அபிவிருத்தி, மனிதநேய செயற்பாடுகள், சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தல், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரித்தல், தன்னார்வ சமூக சேவைகளில் ஈடுபடுதல் போன்ற காரணிகளுக்கு விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகரின் சூர்யா என்ற சமூக சேவை நிறுவனத்தினால் ஆற்றப்பட்ட சேவைகளை பாராட்டும் வகையில் கரு ஜயசூரியவிற்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மேலும்,சமாதானத்திற்காக அர்ப்பணித்தல் மற்றும் சமூக சேவையாற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விஸ்வ சாந்தி மற்றும் டொக்டர் அம்பேத்கர் ஆகிய இரண்டு விருதுகளே சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிர்வரும் 13ம் திகதி இந்தியாவில் வழங்கப்பட உள்ளது.

Related posts

ஜனாதிபதி இல்லாத நிலையில் 4 பதில் அமைச்சர்கள் நியமனம்..!

wpengine

சைட்டத்திற்கு எதிராக ‘மாணவ மக்கள் சக்தி அரங்கம்’ என்ற பெயரில் புதியதோர் எதிர்ப்பு பேரணி..

wpengine

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு…

wpengine