வணிகம்

பூகோள மனித மூலதன சுட்டெண் பட்டியலில் இலங்கைக்கு 70ம் இடம்..

உலக பொருளாதார மன்றத்தின், பூகோள மனித மூலதன சுட்டெண் அடிப்படையிலான பட்டியலில் இலங்கைக்கு 70ம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஒருநாடு எவ்வாறு தமது மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்கிறது என்பதை கணக்கிட்டு இந்த சுட்டெண் தயாரிக்கப்படுகிறது.
தொழிலாளர் உரிமைகள், தொழிற்படை, கல்வித் தகமை, தொழிற்துறையினரின் தொழிற்சார் அறிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அவதானிக்கப்படுகின்றன.

இந்நிலையில் 130 நாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் நோர்வே முதலாம் இடத்திலும் இந்தியா 103ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகின் சிறந்த கடற்கரையாக உணவட்டுன கடற்கரை தெரிவு

wpengine

சீர்குலைந்த பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசினால் பல நடவடிக்கைகள் – பிரதமர்..

wpengine

ஸ்ரீலங்கா டெலிகொம் அணியை வீழ்த்தி HNB Finance இன் விற்பனை சேவைகள் C பிரிவு வெற்றி

wpengine