உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிப்பு குறித்த தீர்மானம் இன்று

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.

17  மாநகரசபைகள் உள்ளிட்ட 23 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் இன்றுடன் பூர்த்தியாகின்றது.

இந்த உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிப்பதற்கு சட்ட ரீதியில் அதிகாரம் உண்டு என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா  தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை நீடிப்பதா அல்லது விசேட ஆணையாளர்களின் கீழ் இயங்கச் செய்வதா என்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் 18 ஆம் திகதி அறிமுகப் படுத்த தீர்மானம்

wpengine

அரநாயக்க, சாமசர மலையிலிருந்து மீண்டும் மண்சரிவு – மீட்புப் பணிகள் இடைநிறுத்தம்

wpengine

ரணிலிடம் அரசியலில் சேறு பூசும் விளையாட்டு இல்லை – மஹிந்த

wpengine