உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடாத்தப்படும் – பைஸர் முஸ்தபா

உள்ளூராட்சி சபைகள் 23 இல் 17 மாநகரசபைகள் மற்றும் ஒரு நகரசபை உட்பட 18 சபைகள் ஒரு விசேட ஆளுநருக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபையின் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.

மேலும், 5 பிரதேச சபைகளின் காலம் முடிவுற்றுள்ள நிலையில், குறித்த பிரதேச சபைகள் பிரதேச செயலாளரின் கீழ்கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த விடயம் குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேசி இறுதியான தீர்வு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், உள்ளூராட்சி மன்றங்களின் காலம் நீடிக்கப்படவுமில்லை கலைக்கப்படவுமில்லை என கூறினார்.

உள்ளூராட்சி எல்லை நிர்ணயங்கள் இன்னும் பூர்த்தியாக்கப்படாதமையினாலேயே தேர்தலுக்கான காலம் நீடிக்கப்படுவதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

Related posts

நாளை தீர்மானம்

wpengine

AstraZeneca தடுப்பூசியை ஏற்றியோருக்கான அறிவித்தல்

wpengine

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு…

wpengine