உள்நாட்டு செய்திகள்

உ. பரீட்சை விடைத்தாள் திருத்தும் முதற்கட்ட பணிகளுக்காக 37 பாடசாலைகளுக்கு பூட்டு…

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் 37 பாடசாலைகள் மூடப்பட உள்ளதுடன், அந்த பாடசாலைகள், மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

572 விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் 8 ஆயிரத்து 432 ஆசிரியர்கள் இந்த விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், 39 பாடசாலைகளில் 428 விடைத்தாள் திருத்த நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி தேர்தல் இவ்வருடத்தினுள் நடாத்தப்படும் – ஜனாதிபதி..

wpengine

சமூக வலைத்தளமான முகநூல் செயற்பாடுகளை முடக்க அரசு தீர்மானம் – ராஜித…

wpengine

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதியானது – ரவிகரன் எம்.பி

Azeem Kilabdeen