உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு வட்டி இல்லாத கடன்..

(FASTGOSSIP COLOMBO) – ஊடகவியலாளர்கள் தமக்கான ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்து கொள்ளவும் ஊடக உபகரணங்களை தரம் உயர்த்திக் கொள்ளவும் வெகுஜன ஊடக அமைச்சு ‘மாத்ய அருண’ விசேட கடன் திட்டத்தின் கீழ் வட்டி இல்லா கடன் வழங்கப்படவுள்ளது.

60 வயதுக்கு உட்பட்ட 03 வருட கால சேவையை பூர்த்தி செய்தவர்களுக்கு ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்ய 03 இலட்சம் ரூபாவும் ஊடக உபகரணங்களை தரம் உயர்த்திக் கொள்ள 1 1/2 இலட்சம் ரூபாவும் இதன் கீழ் கடன் வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பங்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர்,ஊடகம் வெகுஜன ஊடக அமைச்சு, இலக்கம் 163,கிருலப்பனை மாவத்தை இகொழும்பு 05. என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பப்பட வேண்டும்.

Related posts

இந்தியாவினை அதிர்ச்சியில் உறைய வைத்து இலங்கை அணி வெற்றி

wpengine

​தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்

wpengine

கம்மன்பில விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவில் ஆஜர்

wpengine