உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர் கீத் நொயா தாக்குதலில் ஃபீல்ட் மார்ஷல் தொடர்பு

யுத்த காலத்தில் ஊடகவியலாளர் கீத் நொயா தாக்கப்பட்டமை தொடர்பில், முன்னாள் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்பு கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாய்நாட்டுக்கான இராணுவ வீரர்களின் அமைப்பே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த அமைப்பில் இணைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அரசாங்கம், ஊடகவியலாளர் கீத் நொயா மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள தயக்கம் காட்டுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(riz)

Related posts

பிலியந்தலை பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

wpengine

இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை…

wpengine

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர்விநியோகம் தடை

wpengine