உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்கு உத்தரவு சட்டத்திற்கு முரணானது! வெளியானது முக்கிய அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு சட்டவிரோதமானது மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்,ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு ஊரடங்கு உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனவும் அறிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தில்“பொலிஸ் ஊரடங்கு” என்று எதுவுமே கிடையாது.கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை நடைபெற இருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டவிரோத அறிவிப்பு என  நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் விசேட காணொளியொன்றினை வெளியிட்டு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டவிரோதமான அறிவிப்பு எனவும் விளக்கமளித்துள்ளார்.

Related posts

SLC T-20 லீக் போட்டிகளுக்கான 04 தலைமைகள் கொண்ட அணியினர் விபரம் வெளியீடு…

wpengine

எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து அமில நீக்கம்…

wpengine

கோட்டா பங்கேற்பு விழாவில் ரணிலுக்கும் அழைப்பு

wpengine