உள்நாட்டு செய்திகள்

ஊழல் மோசடி குற்றத்தில் முக்கிய பிரமுகர் இந்த வாரத்தில் கைது?

கடந்த அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த வாரத்தில் கைது செய்யப்படவுள்ளார்.

பாரியளவில் ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் இந்த வார இறுதிக்குள் கைது செய்யப்பட உள்ளதாக பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அண்மையில் சில தடவைகள் அழைத்து விசாரணை நடத்தியுள்ளது.

இந்த முக்கிய பிரமுகரிடம் ஏற்கனவே வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தலுக்கு முன்னதாக விசாரணைகளை பூர்த்தி செய்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

wpengine

சிவனொளி பாதமலை அருகில் சுற்றுலா விடுதி அமைக்கவுள்ள இடம் இதுதான்.. (PHOTOS)

wpengine

பயத்தில் அல்ல,சிகிச்சைக்காகவே அமெரிக்கா சென்றேன் – கோத்தபாய

wpengine