உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதலமைச்சர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக மறுப்பு..

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், ஊவா மாகாண முதலமைச்சரால் முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட விசாரணைகள் இன்று(01) நடைபெறவுள்ளது.

அதன்படி, இன்று ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தயநாக்கவுக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தேர்தல் நடவடிக்கைகளினால் குறித்த விசாரணைகளுக்கு இன்றைய தினம் தன்னால் மனித உரிமை ஆணைக்குழு முன் முன்னிலையாக முடியாது என ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தசநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அவரது கோரிக்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றினை வழங்க வேண்டும் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவினால் ஊவா மாகாண முதலைமைச்சருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்ய பதுளை வலய கல்வி பணிப்பாளர் சரத் ரணசிங்க மற்றும் பதுளை தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.வீ தென்னகோன் ஆகியோரையும் இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளது.

#rishma

Related posts

போராட்டக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

News Editor

கொழும்பு நகர மண்டப வீதிகளில்  கடும்  வாகன நெரிசல்

wpengine

றகர் வீரர் வஸீம் கொலையின் சந்தேகநபர்கள் இத்தாலிக்கு தப்பியோட்டம்

wpengine