உள்நாட்டு செய்திகள்வணிகம்

மண்ணெண்ணெய் அடுப்புக்களுக்கு தட்டுப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புறக்கோட்டை உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்ததையடுத்து, மண்ணெண்ணெய் அடுப்பைப் பொதுமக்கள் அதிகளவில் கொள்வனவு செய்கின்றமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பின் விலை 1500 ரூபா முதல் 3,000 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் மண்ணெண்ணெய் அடுப்பைக் கொள்வனவு செய்வதாக புறக்கோட்டை ஐக்கிய தேசிய சுயதொழில் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

சைட்டம் எதிர்ப்புக்கு முழுமையான பங்களிப்பை செலுத்த தயார்..- அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்..

wpengine

இரண்டாம் தவணைப் பரீட்சைகள் எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்பட மாட்டாது..

wpengine

20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று: இறுதி தீர்மானம்

wpengine