உள்நாட்டு செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் அடுத்த விசாரணை ஜூன் வரை ஒத்திவைப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் பிரதிவாதிகள் ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மே 15 ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணைகள் ஜூன் முதலாம் திகதி இடம்பெறவுள்ளன.

சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தின் (SICC) சட்டத்திட்டங்களுக்கு அமைவாக அந்த நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைகளை மாற்றிக்கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அடுத்த கட்ட வழக்கு தாக்கல் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அவற்றை கொண்டு நடத்துவதற்கும் அமைச்சரவை அனுமதியுடன் சிங்கப்பூர் சட்ட நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

பொய்யான பிரசாரங்களால் நற்பெயருக்கு அபகீர்த்தி! நூறு மில்லியன் கோருகிறார் அமைச்சர் ரிஷாட்…

wpengine

இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்கள் திடீரென உயிரிழப்பு – சுகாதார அமைச்சு அதிரடி உத்தரவு..

wpengine

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை முதல் திறப்பு

wpengine