உள்நாட்டு செய்திகள்

எட்கா உடன்படிக்கை மூலம் நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்திருப்பது அத்தியவசியமாகும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ ஹெரிசன் கூறினார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

தற்போதைய கூட்டு அரசு எதிர்வரும் சில வருடங்களின் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அவர் கூறினார்.

அத்துடன், இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள உடன்படிக்கை மூலம் நாட்டிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப் போவதில்லை என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

நாடுதழுவிய மின்சாரத்தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

wpengine

யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் அமைச்சர் ரஞ்சித் கருத்து…

wpengine