உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எட்கா ஒப்பந்த குறித்த கலந்துரையாடலில் இருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விலகல்

இந்தியாவுடன் கையெழுத்திடவிருக்கும் எட்கா ஒப்பந்தம் தொடர்பில் இடம்பெறவிருந்த கலந்துரையாடலில் இருந்து இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் விலகிக் கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் அரசுடன் ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் எவ்வித முன்னேற்றமும் காணப்படாததை அடுத்தே இந்த முடிவை தமது சங்கத்தினர் எடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இந்த ஒப்பந்தம் தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து விஷேட குழுவினர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.ம.சு.முன்னணியானது நாளைய(05) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்காது…

wpengine

சமையல் எரிவாயு குறித்து விசேட குழு

wpengine

ஹம்பாந்தோட்டைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு… பேரணிக்கு ஆயத்தம்..

wpengine