உலக செய்திகள்

எட்டு மாதங்களில் முதன் முறையாக ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – சீனாவில், எட்டு மாதங்களில் முதன் முறையாக ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.

அவர், ஹுபாய் (Hebei)மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தின் பல நகரங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

சீனாவில், இன்று புதிதாக 138 பேரிடம் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது.

அவர்களில் 124 பேர், உள்ளூரில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 81 பேர், ஹுபாய் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன், 43 பேர், வடக்கிழக்கு மாநிலமான ஹெய்லொங்ஜியாங்கைச் (Heilongjiang) சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், சீனாவில் அறிகுறிகளின்றி 78 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இராணுவ மோதல்

Azeem Kilabdeen

சிரியாவில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு தாக்குதல் – 42 பேர் பலி

wpengine

Cambridge Analytica நிறுவனம் மூடப்படவுள்ளது – பேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும்…

wpengine