உள்நாட்டு செய்திகள்

எதிர்கட்சித் தலைமைப் பதவியினை மஹிந்தவுக்கு கோரி எழுத்து மூல கோரிக்கை…

பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று(18) பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை கையளிக்க தீர்மானித்துள்ளதாக குறித்த முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைமைப் பதவியினை வகிக்கின்றார்.

எவ்வாறாயினும், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரகள் ஆதரவு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் அதிகரிப்பு (தொகை இணைப்பு)

wpengine

“சிதைந்து கிடக்கும் முழு தாய்நாட்டையும் மீட்டெடுப்பதற்காக அனைத்துத் துறைகளையும் தூய்மைப்படுத்துவோம்”

Azeem Kilabdeen

குவைட் நாடு சென்ற 32 பெண்கள் இலங்கைக்கு

wpengine