உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சியில் கைகோர்ப்போருக்கு மாவட்டக் குழுத்தலைமைப் பதவி இல்லை – ஜனாதிபதி

எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவருக்கும் மாவட்டக் குழுத் தலைவர் பதவி வழங்கப்படாது என இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கே ஜனாதிபதி மேற்படி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளும் கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைமைப் பதவி வழங்கப்படாது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.

மாவட்ட அடிப்படையில் வெற்றியீட்டிய கட்சிகளுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமைப் பதவி வழங்க இணங்கப்பட்டிருந்தது.

எனினும் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 29 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இந்த உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ

wpengine

கல்வியியற் கல்லூரிகளுக்கு தற்காலிக பூட்டு

wpengine

இறுதியில் இணங்கின

wpengine