ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எதிர்வரும் மாதம் முதல் பெண்களுக்கென தனியான புகையிரதம் அமுலுக்கு…

இலங்கையில் புகையிரதங்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு கருதி பெண்களுக்கென தனித்துவமான புகையிரத பெட்டிகளை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரத பயணங்களின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக தனித்துவமான புகையிரத பெட்டிகளை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கை பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 08ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக பாரிய நகரங்களை நோக்கிச் செல்லும் ஐந்து புகையிரதங்களில் குறிப்பாக வேலை நேரங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஐ.தே.க. வாய்பை சரியாக பயன்படுத்துமா? சஜித்தின் கரங்கள் பலப்படுத்தப்படுமா?

wpengine

ஜனாதிபதியின் மகளுக்கு புதிய அரசியல் பதவி?

wpengine

கூரிய ஆயுதத்தினால் தாக்கி தம்பதியினர் கொலை

wpengine