ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எதிர்வரும் 72 மணி நேரத்தினுள் தாக்கவுள்ள லுபான் புயல்…

எதிர்வரும் 72 மணி நேரத்தினுள் தாழ் அமுக்கம் ஒன்று இலங்கைக்கு அண்மையில், தென்கிழக்கு அரேபியக் கடலில் உருவாகி எதிர்வரும் 9 அல்லது 10 ஆம் திகதி பலமான சூறாவளியாக மாறும் சாத்தியமுள்ளதாக DoctorAdvice4u எனும் தளத்தில் தெரிவிக்கப்படுகிறது .

கடலின் வெப்பம் அரேபியக்கடல் எங்கும் உயர்வாக உள்ளதால் அதன் பாதையை கணிப்பதில் சங்கடங்கள் உள்ளதாகவும்,  இந்த சூறாவளி ஓமான் ,பாகிஸ்தான் அல்லது குஜராத்தை நோக்கி நகரலாம் எனவும் அதன் ஒரு மாதிரி, தென் இந்தியாவை நோக்கி நகரும் எனவும் கூறப்படுகின்றது.

அவ்வாறு நகர்ந்தால் இலங்கையின் வட ,வட மேல் மாகாணங்களில் காலநிலை மாற்றங்கள் நிகழலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இந்த சூறாவளி உருவாகும் போது இலங்கையில் பலத்த மழை பொழிய வாய்ப்புள்ளது பல இடங்களில் திடீர் வெள்ள நிலமைகள் ஏற்படலாம் .

குறித்த சூறாவளிக்கு லுபான் (#Luban) என பெயரிடப்பட்டுள்ளது. இது ஓமான் நாட்டால் பெயரிடப்பட்ட அரேபிய மொழிச் சொல்லாகும்.

இதேவேளை இலங்கைக்குக் கிழக்காக தென் மேல் வங்காள விரிகுடாவில் ஒக்டோபர் 7/8 அளவில் ஒரு தாழ் அமுக்கம் உருவாக வாய்ப்புள்ளது.
அவதானங்களுடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

ஓடுபாதையில் இருந்து வெளியேறி புல்வெளியில் ஓடிய விமானம்: பயணிகள் நிலை என்ன? [VIDEO]

wpengine

இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை – அல்ஜெசீராவை சாடும் சுமதிபால…

wpengine

உதயங்கவின் இலங்கை வருகைக்கு  நீதிமன்ற உதவியை நாடுகிறது மஹிந்த அமைப்பு…

wpengine