உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி – 10 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடிகள் இடம்பெறுவதாக கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக, நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவிருப்பதாக சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.

திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 54 எரிபொருள் நிரப்பு நிலையங்களில், பத்து நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்;.

பாணந்துறை, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடி இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது

Related posts

போராட்டங்களை நிறுத்த இருக்கும் ஒரே வழி இதுதான்!

wpengine

குப்பைமேட்டில் தீ பரவல்

wpengine

தனிமைப்படுத்தல் தொடர்பிலான புதிய அறிவிப்பு

wpengine