உலக செய்திகள்

எல்சல்வடார் முன்னாள் ஜனாதிபதிக்கு 10 வருட சிறை…

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு குற்றத்துக்கு எல்சல்வடார் முன்னாள் ஜனாதிபதி ஆன்டனியோ சாகாவிற்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் நாட்டில் 2004-2009 ஆண்டுகளில் ஜனாதிபதியாக பதவி வகித்த, ஆன்டனியோ சாகா இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தனது மகன் திருமணத்தின்போது 2016 அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின்போது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என கண்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் அந்நாட்டு அரசுக்கு 260 மில்லியன் டாலர் தொகையை (சுமார் ரூ.1,872 கோடி) அவர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஊழலில் சிக்கிய ஆன்டனியோ சாகா அரசு உயர் அதிகாரிகள் 6 பேருக்கு தலா 3 ஆண்டு முதல் 16 ஆண்டு வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவக்கப்படுகிறது.

Related posts

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மோடி தலையிட வேண்டுமென கோரிக்கை.

wpengine

ஆஸியில் பரவும் காட்டுத்தீ காரணமாக மக்கள் கடற்கரையில் தஞ்சம்

wpengine

இஸ்ரேலின் முன்னாள் ஜனாதிபதி சிமோன் இறையெய்தினார்.

wpengine