Top Story 1உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(11) காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.

வாக்காளர்கள் தமது வாக்குகளை மாலை 4 மணி வரை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றதுடன், தேர்தலில் 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, தேர்தலுக்காக எல்பிட்டி பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரத தொழிநுட்ப அதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை…

wpengine

பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

முகமூடி தலைக்கவச தடையின் இடைக்காலத் தடை நீடிப்பு.

wpengine