உள்நாட்டு செய்திகள்

எவன்காட் வழக்கு முடிவுக்கு வந்தது

காலி துறைமுகத்தில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் எவன்காட் (Avant Garde) நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுக்கு கொண்டுவருமாறும் அவரது வெளிநாட்டு பயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என்று சட்டமா அதிபர் தெரிவித்ததாக இன்று நீதிமன்றத்தில் இரகசிய பொலிஸார், தெரிவித்ததனை அடுத்தே நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது.

(riz)

 

Related posts

பிக்குவின் காவியுடையை சட்டத்தரணியால் அகற்ற முடியாது – மஹிந்த

wpengine

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நன்கொடை

wpengine

ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறிக்கு அனுமதி

wpengine