ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஏஞ்சலோ’விற்கு 14 மாதங்களுக்கு 236 இலட்சம், மாலிக்கு 127 இலட்சம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019ம் ஆண்டு நவம்பர் மாதமா முதல் எதிர்வரும் வருடம் இறுதி வரைக்குமான 14 மாதங்கள் ஒப்பந்த காலத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் இடையே அதி உயர்ந்த விலை ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் பெறுமதி அமெரிக்கா டொலர்களில் 130,000 ஆகும். இலங்கை பெறுமதியில் 236 இலட்சமாகும்.

புதிய ஒப்பந்தத்திற்கு அமைய இரண்டாவது இடம் இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித் தலைவர் திமுத் கருனாரத்னவுக்கும் முன்னாள் டெஸ்ட் தலைவர் சுரங்க லக்மாலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இனால் ஒரு வருட தடைக்கு உட்படுத்தப்பட்ட அகில தனஞ்சயவுக்கு ‘D’ பிரிவின் கீழ் அமெரிக்கா டொலர்கள் 50,000 அதாவது இலங்கை பெறுமதியில் 91 இலட்சம் செலுத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமையும் விசேடமாகும்.

எதிர்வரும் 14 மாதங்களுக்கு 5 பிரிவுகளாக இவ்வாறு 34 வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், உபுல் தரங்க, அசேல குணரத்ன, ஷெஹான் மதுஷங்க, மலிந்த புஷ்பகுமார, பானுக ராஜபக்ஷ, பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மென்டிஸ், அஷான் பிரியஞ்சித் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் 14 மாத ஒப்பந்தங்களில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

விடாப்பிடியாய் ரணில் – சஜித்தினை ஓரங்கட்டி புதிய பிரபல துரும்பொன்றுக்கு வாய்ப்பு

wpengine

யுவதியின் தொடையில் தனது பெயரை எழுதி குடும்பம் நடாத்திவிட்டு ஏமாற்றிய நபர் கைது

wpengine

கர்ப்பிணி ஆசிரியைகள் இன்று முதல் உரிய ஆடையில் வர அனுமதி….

wpengine