Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பயணத்தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கும் பயணிகள் விமானங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் விதித்திருந்த தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

டுபாயின் முன்னணி விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் குறிப்பிட்ட சில பயணிகள் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த 14 நாட்களில் இலங்கை உள்ளிட்ட அந்த நாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேறு எந்த இடத்திற்கும் பயணிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க தீர்மானம்

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேனவின் பிணை மனு நிராகரிப்பு…

wpengine

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டு தொடர்பாக பொலிஸ்மா அதிபர் கடிதம் – சபாநாயகர்..

wpengine