உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து நிமல் கருத்து

கனவில்கூட ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாரில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் தீர்மானத்திற்கு அமையவே தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்டு வருகிறேன். இது எனது தனிப்பட்ட தீர்மானம் அல்ல கட்சியின் தீர்மானமாகும்.

சுதந்திர கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ளவில்லை.

அவ்வாறு இணைந்து கொள்ள கனவில் கூட நினைக்கவில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமக்கு சுதந்திரக் கட்சியுடனான அரசியலில் ஈடுபாடு குறைந்தாலும் தாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட தயாரில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஏப்ரல் 20 திகதி முதல் மீட்டர் கட்டாயமாகிறது…

wpengine

கோபால் பாக்லே – மஹிந்த சந்திப்பு

wpengine

முதலாவது டெஸ்ட் போட்டியில் தம்மிக்க விலகல்

wpengine