உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் விலகல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் விலகியுள்ளார்.

கட்சியில் இருந்தும், கட்சியின் நடவடிக்கைகளில் இருந்தும் முற்றாக விலகிக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சஜித் பிரேமதாசவின் நடவடிக்கைகளை விமர்சித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதை தனக்கு தெளிவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related posts

முகநூல் களியாட்ட நிகழ்வில் 21 பேர் கைது

wpengine

பாண் மற்றும் பால் மாவுக்கு விலை சூத்திரம்

wpengine

பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைப்பு..!

wpengine