Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஒரே நாளில் 513, 820 பேருக்கு தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்று (30) கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 513, 820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 500,000 க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கு ட்விட்டர் பதிவொன்றில் இலங்கையை பாராட்டி உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்திருந்தது.

கொவிட் தடுப்பு நடவடிக்கையின் கீழ், இலங்கையில் நேற்றுமுன்தினம் மாத்திரம் இலங்கையில் 515, 830 பேருக்கும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வெள்ளவத்தை அனர்த்தம் தொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் பொலிசில் சரண்..

wpengine

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் கைது

wpengine

ஜனாதிபதி செயலக பணியாள் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுடன் கைது..

wpengine