விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து முறைப்பாடு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் போட்டி நடத்தப்படாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், சூதாட்டத்திற்காக தன்னை ஒருவர் அணுகியதாக வீரர் ஒருவர் முறைப்பாடு அளித்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணைய தலைவரான அஜித் சிங் கூறியுள்ளார்.

சூதாட்டத்துக்கு அணுகப்பட்ட வீரர், அவரை அணுகிய நபர் குறித்த தகவலை வெளியிடாத அஜித் சிங், இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜஸ்தான் தலைவர் ஸ்மித் இற்கு அபராதம்

wpengine

ஊக்கமருந்து பரிசோதனை வலையில் சிக்கினார் குசால்

wpengine

IPL இருபதுக்கு இருபது பிரீமியர் லீக் போட்டிக்கான அணி விவரங்கள் – இலங்கை அணியிலிருந்து இருவர்

wpengine