உள்நாட்டு செய்திகள்

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் மூன் இலங்கை விஜயம்..

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(31) இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாட்டுக்கு வரும் இவர், இரு நாட்கள் இங்கு தங்கியிருப்பார்.

குறித்த இந்த விஜயத்தின் போது பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ள அவர் அங்குள்ள நலன்புரி முகாம்களிலுள்ள மக்களையும் சந்திக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூன் லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் விஷேட உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

wpengine

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக ‘சம்மாந்துறை மக்களின் அழுகை குரல்’ துஆ பிராத்தனை..!

wpengine

மேலும் 08 பேர் அடையாளம் [UPDATE]

wpengine