உள்நாட்டு செய்திகள்

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கைக்கு

(FASTNEWS|COLOMBO) – அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயா லெட்சோசிவூல் (Clément Nyaletsossi Voule) 09 நாள் பயணத்தை மேற்கொண்டு இன்று(18) இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளையும், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்களையும், மனித உரிமை ஆணைக்குழுவையும் அவர் சந்தித்து பேசவுள்ளார்.

இவர் தனது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த வருடம் ஜூன் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று..

wpengine

களுத்துறையின் சில பகுதிகளில் 9 மணித்தியால நீர் வெட்டு…

wpengine

இந்தோனேசியாவில் மீளவும் சுனாமி எச்சரிக்கை…

wpengine