உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஒரு கிலோ உருளைக்கிழங்கை 100 ரூபாவிற்கு சதொச கொள்வனவு செய்ய நடவடிக்கை…

உள்நாட்டு உருளைக்கிழங்கை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்ய சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

விவசாய அமைச்சிற்கும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படிஇ ஒரு கிலோ உருளைக்கிழங்கை 100 ரூபாவிற்கு சதொச கொள்வனவு செய்யவுள்ளது. தற்போது உள்நாட்டு உருளைக்கிழங்கை மாத்திரமே சதொச விற்பனை செய்வதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விவசாயிகளிடமிருந்து நேரடியாக உருளைக்கிழங்கைக் கொள்வனவு செய்வதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இரண்டு இடங்கள் எதிர்காலத்தில் பிரகடனப்படுத்தப்படும்.

தற்போது இடைத்தரகர்கள் மூலமாகவே உள்நாட்டு உருளைக்கிழங்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. இதன் மூலம் விவசாயிகளுக்கு உயர்ந்த விலை கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஷிரந்தி, யோஷித்தவை வழிக்கு கொண்டு வர   நீதிமன்ற உத்தரவு……………

wpengine

கல்முனை கடலில் கடந்த 15 நாட்களாக காணாமல் போன 4 மீனவர்களும் மீட்பு..!

wpengine

இந்திய கிரிக்கெட் குழாமிலிருந்து யுவராஜ்,ரெய்னா உட்பட பலர் நீக்கம்..

wpengine