Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும், நாட்டை விட்டு வெளியேறினார்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுரங்க உபேசேகர இன்று அத தெரணவிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக சாதாரண சத்திரசிகிச்சைகளை தவிர்த்து ஏனைய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதில் வைத்தியசாலை நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர் கல்விக்காக நாட்டை விட்டு வெளியேறினாரா அல்லது நிரந்தர வதிவிடத்திற்காக சென்றாரா என வினவிய போதுஇ ​​தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என பணிப்பாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அவசர சத்திரசிகிச்சைகளுக்காக நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டியுள்ளதாகவும், வழமையான சத்திரசிகிச்சைகள் நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

 

Related posts

நுவரெலிய மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அனுமதி…

wpengine

வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பம்

wpengine

‘கொழும்பு துறைமுக வளாகாத்தில் தீ’ குறித்த செய்தி பொய்யானது – அர்ஜுன

wpengine