உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் இந்த பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணி

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலும் ஒரே சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பதவிக் காலம் நீடிப்பு

இந்த விசேட ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ம் திகதி இந்த செயலணி நிறுவப்பட்டது.

கடந்த மே மாதம் 27ம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு பதவிக் காலத்தை நீடிப்பதாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவித்துள்ளார்.

 

Related posts

நிர்மலநாதன் எம்.பி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் ரிஷாத் கோரிக்கை.

wpengine

வெள்ளாங்குள பிரதேச மக்களின் பரிதாபம்! ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டிருப்பதாக குமுறல்…

wpengine

அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு நிவாரண பெக்கேஜ் – அகில விராஜ்..

wpengine