விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி புதிய திகதி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | டோக்கியோ ) – டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 23 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதமே போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜூலை மாதம் 23 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி விவரம்..

wpengine

சூதாட்டம் : உமர் அக்மலின் தண்டனையில் மாற்றம்

wpengine

நியூசிலாந்து VS இந்திய சுற்றுப்பயண போட்டி அட்டவணை வெளியீடு

wpengine