உள்நாட்டு செய்திகள்

ஓசரி’சாரியினை தூக்க மாணவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை..

உலக சாதனைக்காக மாணவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்காக 250 மாணவர்களை பயன்படுத்தியமை குறித்த இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

கண்டி – கந்தேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பாடசாலை மாணவர்களை பயன்படுத்தியதாக திருமண தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்போது 250 மாணவர்கள் வரை பல அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

திருமண நிகழ்விற்காக பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் கல்வியதிகாரிகள் உடனும் தற்போது கலந்துரையாடல் இடம்பெறுவதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற விசேட இலக்கத்தை தொடர்பு கொண்டு முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

நாளை அதிகாலை 4 மணியுடன் நிறைவு

wpengine

அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்

wpengine

இலங்கைக்கு இந்தியா எரிபொருள் உதவி..

wpengine