உள்நாட்டு செய்திகள்

கஜா புயல் – 700 குடும்பங்கள் பாதிப்பு…

யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த கஜா புயல் நேற்று(15) மாலை 6.10 மணிமுதல் இன்று(16) அதிகாலை வரை கடுமையாக வீசியதில் யாழ்.மாவட்டத்தில் ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, 52 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 500 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. கடைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் 20 சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.மாவட்ட செயலகத்தினால் அவசர புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் சுமார் 700 குடும்பங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வட மாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட்ட சம்பவம் தொடர்பில் நடவடிக்கை…

wpengine

நீர்வழங்கள் வடிகாலமைப்பு ஊழியர்கள் நாளை நாடாளாவிய ரீதியாக பணிப் புறக்கணிப்பில்..

wpengine

ரயில்வே தொழிற்சங்கம் மற்றும் அமைச்சரவை துணைக்குழுவுக்கும் இடையிலான இணக்கப்பாடு..

wpengine