உலக செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவின் 8 நகரங்களில் அதிக வெப்பம்

(FASTNEWS|COLOMBO) – கடந்த 24 மணித்தியாலங்களில் உலகில் அதிக வெப்பம் நிலவும் நகரங்களின் பட்டியலிலுள்ள முதல் 15 இடங்களில் இந்தியாவின் 8 நகரங்கள் உள்ளடங்கியுள்ளன.

பருவநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் குழுவினால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் உலகமயமாதல் என்பன காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பநிலை அதிகரித்துவருகின்றது.

குறித்த அறிக்கையில் முதல் 15 இடங்களில் இந்தியாவின் 8 நகரங்கள் இடம்பிடித்துள்ளதுடன், மீதமுள்ள நகரங்கள் இந்திய அண்டை நாடுகளான பாகிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கரு மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன் உத்தர பிரதேஷின் பந்தா, ஹரியாணாவின் நருணால், கோட்டா, ஹைதராபாத், ஜெய்ப்பூர் லக்னோ மற்றும் டெல்லி ஆகிய இடங்களே குறித்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் அனல்காற்று நீடிக்கும் என்பதுடன் இதனால் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கிளர்ச்சியாளர்கள் பகுதியில் இருந்து நோயாளிகள் வெளியேற்றம்…

wpengine

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்

wpengine

உலகளாவிய ரீதியில் ஏழாயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

wpengine