உள்நாட்டு செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்ற ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தூதுவர் சரோஜா சிறிசேன கடந்த 1998 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகவும், வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளராகவும் பதவி வகித்ததுடன், மேலும் பல இராஜதந்திர பதவிகளை அவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்…

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்….

wpengine

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த 2ஆவது இலங்கையர் யோஹான் பீரிஸ்…

wpengine