உள்நாட்டு செய்திகள்

கடற்படை முகாம்கள் அகற்றப்படும் – பிரதமர்..

சிலாவத்துறை மற்றும் முள்ளிக்குளம் பகுதிகளில் உள்ள கடற்படை முகாம்களை அகற்ற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விரைவில் தீர்வு கிடைக்கப்பெறும் எனவும் காணிப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடன், மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விரைவில் பேச்சுக்களை நடத்தி விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்வார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(05) இடம்பெற்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முள்ளிக்குளம் மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராடி வருவது தொடர்பில் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

20 இற்கு பொதுஜன வாக்கெடுப்பு தேவையில்லை

wpengine

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்..

wpengine

நேற்றைய தொற்றாளர்களில் 23 பேர் கடற்படையினர்

wpengine