உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடவுச்சீட்டை ஒப்படைக்காது இழுத்தடிக்கும் மஹிந்த

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

Related posts

அமைச்சர் பதவிகளை மீளவும் முஸ்லிம் பா.உறுப்பினர்கள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்

wpengine

அஸ்மினை இல‌ங்கைக்கு வ‌ர‌வ‌ழைத்து தண்டிக்க வேண்டும்!

Azeem Kilabdeen

சிறுபான்மை பிரதிநிதியை வென்றெடுக்க புத்தளம் மண் ஒன்றுபட வேண்டும்

wpengine