உலக செய்திகள்

கடும் மழை – 3 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை…

கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(02) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்

இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருவதால், இந்த மூன்று மாவட்ட பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

பேஸ்­புக் மற்றும் டுவிட்­டரின் தலைமைகளுக்கு ஐஎஸ் கொலை அச்சுறுத்தல்

wpengine

உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

wpengine

சீனாவை தொடர்ந்து இத்தாலியில் அதிகளவான உயிரிழப்புக்கள்

wpengine