உள்நாட்டு செய்திகள்

கட்சிச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு..

மேலதிக பட்டியலில் தமது கட்சிகளுக்கு கிடைத்துள்ள ஆசனங்களுக்காக நியமிக்கப்படவுள்ள பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு குறித்த கட்சிகளின் செயலாளர்களுக்கு இன்று(12) அறிவிக்கவுள்ளது.

தொகுதிவாரியாக வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானியில் வௌியிடுவதற்காக மேலதிக பட்டியல் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மேலதிக பட்டியலில் வேட்பாளராக போட்டியிட்ட உறுப்பினர்களின் பெயர்கள் மாத்திரமே மேலதிக பட்டியலில் பெயரிடப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்தது.

எவ்வாறாயினும் , தொகுதிவாரியாக வௌியான தேர்தல் முடிவுகள் 14ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

 

 

#rishma

Related posts

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகளும் ரத்தாகும் பதவிகளும்

wpengine

வரி அதிகரிப்பினால் புதிய வாகனப் பதிவுகளில் பாரியளவில் வீழ்ச்சி

wpengine

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு…

wpengine