ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கட்டாயமாக அமைச்சரவை அமைச்சுப் பதவி வேண்டும் – பியசேன

காலி மாவட்டத்தில் இரு கட்சிகளிலும் உள்ள சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் தான் என்றும், புதிய அமைச்சரவை அமைச்சுப் பதவி தனக்கு கட்டாயம் வேண்டும் எனவும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே நேற்று(18) ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ அரசிலும் சரி மைத்திரிபால சிறிசேன அரசிலும் சரி காலிக்கு மட்டுமின்றி தனக்கும் பாரியளவு அநீதிகள் இடம்பெற்றது.அரசியல் தீர்வுகளும் இதற்கு ஒரு காரணமாகும்.இரு கட்சிகளிலும் உள்ள சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் நான். ஆதலால் அமைச்சரவை அமைச்சுப் பதவி இம்முறை எனக்கு கிடைக்க வேண்டும். கதையொன்று உள்ளது, ஜனாதிபதி ஸ்ரீலங்கா கட்சியில் இருந்து வந்தோருக்கு வழங்க மாட்டாராம்…

அவ்வாறு இல்லை என்றால் எனக்கு கட்டாயம் அமைச்சரவை அமைச்சுப் பதவி வேண்டும். அதற்கான தகுதி எனக்குண்டு. நெடுங்காலமாக காலி மக்களுக்கு நடந்த பிழைகளை சரி செய்ய இது வழியாக அமையும். என்னவென்று பார்ப்போம்.. வழங்கவில்லை என்றால் என்ன செய்ய..”

Related posts

உலக சாதனைகள் இரண்டிற்கு உரிமம் கோர மாலிங்கவுக்கு வாய்ப்பு…

wpengine

இருபதுக்கு – 20 தொடரின் இலங்கை அணித் தலைவராக மாலிங்க

wpengine

கன்னித் தன்மையினை விற்கும் 17 வயது மொடல் அழகி..

wpengine