உள்நாட்டு செய்திகள்

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு

(FASTNEWS | COLOMBO) – தனக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டமையானது சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து, கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு எல்.டி.பி.தெஹிதெனிய மற்றும் எஸ்.துரைராசா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று(31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள மூவர் அடங்கிய நீரியரசர்கள் குழாம் தேவை என தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நௌசர் பௌசி கைது..!

wpengine

பசில் FCID முன்னிலையில் ஆஜர்

wpengine

எதிர்க்கட்சியில் கைகோர்ப்போருக்கு மாவட்டக் குழுத்தலைமைப் பதவி இல்லை – ஜனாதிபதி

wpengine