உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்கவிலிருந்து பயணித்த விமானம் சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறக்கம்…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 138 பயணிகளுடன் நேற்றிரவு (13) பயணத்தை ஆரம்பித்த விமானமொன்று இயந்திர கோளாறு காரணமாக சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரை நோக்கி பயணித்த விமானமொன்றே மீள தரையிறக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 11. 30 இற்கு பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்திலிருந்த பயணிகள் மற்றுமொரு விமானத்தினூடாக இன்று(14) அதிகாலை மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

Related posts

ஜே.வி.பி லால்காந்த இராஜினாமா

wpengine

புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்குமாறு சு.கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவிடம் கோரிக்கை

wpengine

பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பதவி நீக்கம் செய்யுமாறு கோரிக்கை..

wpengine