கேளிக்கை

கணவரை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா…

(FASTNEWS|INDIA) தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்துள்ள சமந்தா, படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம் கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் எதிர்வரும் 29 திகதி வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் வருகிறார். இதில் சமந்தா, மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
“சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் கூறியபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்று சமந்தா கூறியுள்ளார்.

சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக தியாகராஜ குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கவர்ச்சிகர முன்னணி நடிகை சன்னி லியோனுடன் கைகோர்க்கிறார் சேவாக்..

wpengine

‘2.0’ படத்தில் வித விதமான ஆடையில் தோன்றும் எமிஜாக்சன்..

wpengine

மகளின் முதல் படத்தால் கவலையும், மகிழ்ச்சியுமடைந்த ஸ்ரீதேவி…

wpengine