உள்நாட்டு செய்திகள்

கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு…

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று(19) காலை இடம்பெற்றுள்ளது.

குண்டசாலை, ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 136 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. சிறிய நடுத்தர பூரண அடிப்படைகளில் சொத்துக்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், உயிர் சேதங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய 05 இலட்சம் ரூபா வழங்கப்படுவதோடு, முதல் கட்டமாக ஒரு இலட்சம் ரூபா இன்று வழங்கப்பட்டது.

அமைச்சர் அப்துல் ஹலீம், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : பின்வாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி..!

wpengine

நாட்டில் வேகமாக பரவி வரும் வெட்டுக்கிளிகளின் தாக்கம்

wpengine

2018ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்தல் இன்று…

wpengine