உள்நாட்டு செய்திகள்

கண்டியில் தொடர்ந்தும் 1,000 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில்…

அண்மையில் நாட்டில் இடம்பற்ற அசாதாரண சூழ்நிலை தற்போது தணிந்த போதிலும், கண்டியில் தொடர்ந்தும் 1000 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், கண்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை மற்றும் விமானப்படையினர் தற்போது அகற்றிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் அமைதி நிலவி வருவதாகவும், எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும், மக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுத்துச் செல்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய படையினர் அகற்றிக் கொள்ளப்படுவதாக பிரிகேடியேர் சுமித் அத்தபத்து மேலும் தெரிவித்துள்ளார்.

 

===

Related posts

சுமார் 42,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு…

wpengine

சுகாதார அமைச்சு நிர்வாகத்திடமிருந்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.

wpengine

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

wpengine