உள்நாட்டு செய்திகள்

கண்டி அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கருக்கான தெரிவு ஏப்ரலில்

கண்டி அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கரை தெரிவு செய்யும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 7ம் திகதியன்று இடம்பெறவுள்ளது.

இதற்கான தேர்தல் 7ம் திகதி மாலை 4 மணிக்கு இடம்பெறும் அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கராக இருந்த வணக்கத்துக்குரிய கலகம தம்மசிடி ஸ்ரீ தம்மானந்த அத்தாஸ்ஸி தேரர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலமானதை அடுத்து இந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

இலங்கையின் பௌத்த மதத்துக்கு முதன்மையான குருவாக விளங்கும் அஸ்கிரிய மகாநாயக்கர், அரசியலுக்கும் முக்கிய ஆலோசகராக சில வேளையில் முடிவுகளை மாற்றுபவராக செயற்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 132 பேர் இன்றைய தினம் வீடு திரும்பினர்

wpengine

மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு

Azeem Kilabdeen

கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்

wpengine